Thursday, September 12, 2013

சீனாவில் மிக உயரமான விமான நிலையம் திறப்பு!


Thursday, September 12, 2013
பெய்சிங்::சீனாவில் மிக உயரமான இடத்தில் கட்டிய விமான நிலையம்  திறக்கப்படுகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் சிசுவான் மாகாணத்தில் கார்ஷி பகுதியில் டயோசெங்யாடிங் என்ற இடத்தில் விமான நிலையம் கட்டபட்டுள்ளது. இது கடல் மட்டத்திற்கு 4,411 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிட்டன. அதை தொடர்ந்து இந்த விமான நிலையம் வருகிற 16-ம் தேதி திறக்கப்படுகிறது. 
 
சிசுவான் மாகாண தலைநகர் செங்குவில் இருந்து டயோசெங்யாடிங்குக்கு பஸ் மூலம் செல்ல 2 நாட்கள் ஆகும். தற்போது விமான நிலையம் கட்டப்பட்டதால் 65 நிமிடத்தில் சென்றடையமுடியும். 
இந்த விமான நிலையமே உலகின் உயர்ந்த இடத்தில் கட்டப்பட்ட விமானநிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment