Thursday, September 5, 2013

இலங்கையுடன் நட்பு நடாக இந்தியா இருந்திருந்தால் ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக பகிரங்கமாக வாக்களித்திருக்க வேண்டும் இந்தியா: இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!

Thursday, September 05, 2013
இலங்கை::::வடக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் இந்தியா அவர்களுக்கு நிர்வாக மற்றும் நேரடி உதவிகளை வழங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2014இல் இந்தியாவில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ள சுப்ரமணியன் சுவாமி, இலங்கையில் செப்டெம்பர் 2 - 5ம் திகதிவரை நடைபெறும் பாதுகாப்பு கருத்தரங்களில் பங்கேற்றுள்ளார்.

இலங்கையுடன் நட்பு நடாக இந்தியா இருந்திருந்தால் ஐநா சபையின் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும். பகிரங்கமாக இலங்கைக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். அதன்பின் இலங்கையும் சமமாக பதிலளித்திருக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வடக்கு கிழக்கில் இருந்து சிங்களவர்களை எவரும் விரட்டியடிக்கவில்லை. ஆனால் காஸ்மிர் பிரச்சினையில் 500,000 ஹிந்துக்கள் விரட்டப்பட்டனர். அதனால்தான் அங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டால் ஒரு லட்சம் அல்லது ஒரு மில்லியன் முன்னாள் படை வீரர்களை அங்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துவருவதாக செய்தியாளர் எழுப்பிய காஸ்மீர் - இலங்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த சுவாமி தெரிவித்தார்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கை ஒப்பிட முடியாது. சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு சென்று குடியேறுவதில் எந்தத் தடையும் இல்லை. காரணம் அது இலங்கைன் ஒரு பகுதியாகும். இலங்கையர்கள் நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐநாவுடன் தங்கியிருக்காமல் இந்தியா வலய நாடுகளுடன் நட்புறவை பேணி வலய பாதுகாப்பு தடுப்பாக இருக்க வேண்டுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுவாமி, 

உங்கள் கருத்துடன் நான் இணங்குகிறேன். இந்தியா ஆசிய வலயம் குறித்து சிந்திக்க வேண்டும். சீனாவுடன் நட்புறவு பேண வேண்டும். மூலோபாய சிந்தனை விஷயங்களில் மேற்கத்திய நாடுகளில் நமது தொடர்பை வரையறுக்க வேண்டும் என நான் கருதுகிறேன். நாம் அவர்களுடன் நட்புறவு பேண வேண்டும். ஆனால் அவர்களது பாதுகாப்பு முகாம்களை பின்பற்றுபவர்களாக செயற்பட கூடாது´ என்றார்.

கேள்வி: வடக்கு தேர்தல் வருகிறது. அதில் வென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண ஆட்சி அமைத்தால் இந்தியா அவர்களுக்கு நேரடியாகவா அல்லது மறைமுகமாகவா உதவும்?

பதில் சுவாமி: ரஜீவ் காந்தி புலிகளினால் கொலை செய்யப்பட்ட பின் இந்தியா இலங்கை தமிழர்களுக்கு நேரடியாக உதவ ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. அது இலங்கை அரசின் ஏற்பில் தங்கியுள்ளது. நாம் ஒரு இலங்கையை நம்புகிறோம். புலிகளின் தனி ஈழத்தையோ அல்லது தனி தமிழ் சொந்த மண்ணையோ நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்´.

கேள்வி: வடக்கில் மீனவர்கள் குறித்து பாரிய பிரச்சினை உள்ளது. இலங்கை கடற்பரப்பை அத்துமீறுவதும் தடை செய்யபட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதையும் இந்தியாவால் ஏன் தடுக்க முடியாது?

பதில் சுவாமி: நல்லது. ஏழ்மை மீனவர்களுக்கு இந்திய கடலில் மீன்கள் இல்லை. அனைத்து தரமான மீன் இனங்களும் இலங்கை கடற்பரப்பில் உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் முக்கியம் என்பதால் நாம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என நான் கருதுகிறேன். இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கும் அளவிற்கு மாற்றுத் திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும்´.

கேள்வி: உங்களது பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தால் இப்பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன?

பதில் சுவாமி: நான் இலங்கை அரசாங்கத்துடன் பேசி உங்களது மீன்களை திங்கள், புதன், வெள்ளி நாட்களில் நாம் பெறுகிறோம். செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு நாட்களில் நீங்கள் பெறுங்கள் என்று கூறுவேன். எம்மாள் அதனை செயற்படுத்த முடியும். இரு தரப்பு பக்கமும் போதுமான மீன் வளம் உள்ளது. அத்துடன் வேறு மாற்று தொழிலை பார்க்குமாறு எமது மீனவர்களை எம்மாள் கோர முடியும். காரணம் இது எதிர்காலத்துடன் கூடிய தொழில் அல்ல. நாம் இலங்கையுடன் நட்புறவு வைத்திருந்தால் இத்திட்டங்களை செயற்படுத்த முடியும்´.

கேள்வி: இந்த விவகாரங்களுக்கு உண்மை தீர்வாக அது இருக்க முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா..?

பதில் சுவாமி: ஆம், ஆம். இவ்விவகாரங்களுக்கு எதிரானதல்ல. ஆனால் இலங்கையுடன் நட்புறவுள்ள இந்திய அரசாங்கமாக இருந்தால் ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து பகிரங்கமாக இலங்கையை ஆதரித்திருக்க வேண்டும். ஆம். இலங்கை தாராளமாக இருக்கலாம்´.

கேள்வி: இப்போது ஒத்துழைப்பு இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா..?

பதில் சுவாமி: இந்த நேரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு திமுக தாக்கம் இருப்பதால் அவர்களால் முடியவில்லை. பொதுநலவாய மாநாட்டுக்கு வருவதா இல்லையா என்பது குறித்தும் அவர்களால் தீர்மானம் எடுக்க முடியாதுள்ளது. அவர்கள் ஐநாவில் இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்´. 

No comments:

Post a Comment