Monday, September 23, 2013

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைக்கு தெரிவானவர்களின் விபரங்களை இந்த வாரத்திற்குள் வெளியிட நடவடிக்கை!

Monday, September 23, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை இந்த வாரத்திற்குள் வர்த்தமானியில் பிரசுரிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது தேர்தல் செயலகத்திற்கு கிடைத்த வண்ணமுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் முழுமையாக கிடைத்ததன் பின்னர் தேர்தல் நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment