Monday, September 16, 2013

ஆட்சியில் இருந்தபோது இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி எதுவும் செய்யவில்லை: ஓ.பன்னீர்செல்வம்!

Monday, September 16, 2013
காஞ்சிபுரம்::காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் வி.சோமசுந்தரம், மொளச்சூர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக நிதி அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:–

எம்.ஜி.ஆரால் 16 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்ட அ.தி.மு.க. இன்று அம்மாவின் அயராத, தன்னலமற்ற உழைப்பினால் ஒன்றரைக்கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் யாராலும் அசைத்து பார்க்க முடியாத ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது.

தமிழகத்தினை 23 ஆண்டுகள் ஆண்ட ஒரே கட்சியாகவும் அ.தி.மு.க. விளங்குகின்றது. ஆட்சியில் இல்லாத போதெல்லாம் மொழிப் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை கருணாநிதி கையில் எடுப்பார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது டெல்லியில் உள்ள தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 50 லட்சம் கட்டணமாக செலுத்த கேட்கப்பட்டது.

ஆனால் கருணாநிதி 10 லட்சம் தருவதாக கடிதம் மட்டுமே எழுதினார். ஆனால் அம்மா முதல்வரானவுடன் தமிழ் இருக்கை அமைக்க ஒரே தவணையில் 50 லட்சம் ரூபாயை அளித்தார். எனவே தமிழ்மொழியின் பெருமையினை உலகெங்கும் பறைசாற்றும் ஒரே தலைவராக புரட்சித்தலைவி விளங்குகின்றார்.

ஆட்சியில் இருந்தபோது இலங்கை தமிழர்கள் நலனுக்காக ஏதும் செய்யாமல் ஆட்சி போன பின்பு டெசோ மாநாடு என்ற பெயரில் உலகத் தமிழர்களை கருணாநிதி ஏமாற்றுகின்றார்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், என்.எம்.வரதராஜுலு, தும்பவனம் ஜீவானந்தம், மைதிலி திருநாவுக்கரசு, பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், பேரவை இணை செயலாளர் காஞ்சி பரிமளம், பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், நிர்வாகிகள் அத்திவாக்கம் ரமேஷ், தமிழ்வாணன், என்.பி.ஸ்டாலின், லயன் சி.என்.சந்திரன், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஒன்றிய செயலாளர்கள் வேளியூர் தன சேகரன், பிரகாஷ்பாபு, அண்ணாமலை கலந்து கொண்டனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment