Tuesday, September 10, 2013
இலங்கை::எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் விளம்பரங்களின் பிரதியை தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலின்போதும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு வேட்பாளர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம், விளம்பரங்கள், தேர்தலுடன் தொடர்புடைய ஆவணங்கள் வெளியிடப்படும் தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
1930 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் இடம்பெற்ற தேர்தல்களின்போது வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் அடங்கிய தொகுப்பு தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்தில் பேணப்பட்டு வருகின்றது.
தேர்தல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment