Sunday, September 22, 2013

தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் வாக்களிக்க வந்த மக்களை தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசாரம்!

Sunday, September 22, 2013
இலங்கை::தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது  வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில்  வாக்களிக்க வந்த மக்களை தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசாரம்!
 
தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது மன்னார் எழுத்துார் என்ற இடத்தில் அமைந்திருந்த 17ம் இலக்க வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில்பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கத்தக்கதாக அந்நிலையத்திற்கு வாக்களிக்க வந்த மக்களை தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு சில தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிக்கொண்டிருந்ததாகவும், இது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையாளருக்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் முறைப்பாடு செய்துள்ளார்.
 
இது விடயமாக அவர் குறிப்பிடும்போது,
 
அதேபோன்று வேறு சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகாமையில் சில மதகுருக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறு மக்களைத் துாண்டியதோடு, அந்நிலையங்களில் நிறைய ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாகவும், தேர்தல் ஆணையாளருக்கு சமர்ப்பித்துள்ள மற்றுமொரு முறைப்பாட்டில் செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார். தனது முறைப்பாட்டில் பின்வரும் நிலையங்களில் குறித்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அந்நிலையங்களாவன, மன்னார் மாவட்டத்தில் ஒன்று வங்காளை வாக்களிப்பு நிலையம் இரண்டாவது பேசாலை பாத்திமா கல்லுாரி வாக்களிப்பு நிலையம் மூன்றாவது தாழுப்பாடு சென்சேவியர் மகளிர் கல்லுாரி வாக்களிப்பு நிலையம், நான்காவது நாநாட்டான் வாக்களிப்பு நிலையம் ஆகியனவாகும்.
 
தனது மற்றுமொரு முறைப்பாட்டில் இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்கச்சென்றபோது தங்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தும், சகல ஆவணங்களும் அவர்கள் வசமிருந்தும், பழமையான அடையாள அட்டையில் ஒரு சில எழுத்துக்கள் தெளிவின்மை காரணமாக அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது மன்னார் மாவட்டத்தில் கொக்குப்படையான் வாக்களிப்பு நிலையத்தில் நடந்துள்ளது. செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தேர்தல் ஆணையாளருக்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து நிலைமை ஓரளவு சீர் செய்யப்பட்டது.
 
அதேநேரம் மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டியில் இரண்டு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சில  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் காடையர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வைஎல்.எல். ஹமீட் தெரிவித்தார்.
 
மறைந்த தலைவரின் பெயரை முதலீடாக வைத்து இன்னும் கட்சி நடாத்துகின்றவர்கள் தமது தோல்வியை  முன்கூட்டியே அறிந்ததன் காரணமாக காடைத்தனங்களில் ஈடுபட்டமை மிகவும் வருந்தத்தக்க விடயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment