Saturday, September 21, 2013
மும்பை::மும்பை நீதிமன்ற வளாகத்திலிருந்து முக்கிய தீவிரவாதி ஒருவன் தப்பியோடிவிட்டான். அவனை பிடிக்க மும்பை போலீசார் வலை விரித்துள்ளனர்.
கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் 50 பேர் பலியானார்கள். 200 பேர் காயமடைந்தனர்ர. இந்த சம்ப்வம் தொடர்பாக அப்ஷல் இஸ்மானி என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
இவன் இந்திய முஜாகீதீன் இயக்கத்தை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இவன் உட்பட 23 பேர் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்காக மும்பை போலீசார் இந்த தீவிரவாதியை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது தீவிரவாதி இஸ்மானி நீதிமன்ற் வளாகத்திலிருந்து பலத்த பாதுகாப்பை மீறி தப்பி ஓடினான். கோர்ட்டுக்கு ஆஜராக வந்தபோது இச்சம்பவம் நடந்தது. கட்டுக்காவலை மீறி இவன் தப்பியது எப்படி? ஒரு வேளை போலீசே உதவியதா என்றெல்லாம் சந்தேகிக்கப்படுகிறது. இகுப்பினும் இவனைப் பிடிக்க வலை வீசி தேடிவருகிறார்கள்.

No comments:
Post a Comment