Friday, September 13, 2013
இலங்கை::வடக்கில் தேர்தல் முடியும் வரை படையினரை முகாம்களுக்குள் முடக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருப்பதை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கண்டித்துள்ளார்
யாழ்ப்பாண குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை பாரியளவில் குறைக்கப்படடுள்ளது.போருக்கு பின்னரான நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த எண்ணிக்கை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் படைகளை முகாம்களுக்குள் முடக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள செய்தியை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய கண்டித்துள்ளார்.
1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதில் இருந்து படையினர் அங்கு நிலைகொண்டுள்ளனர்.2009 ஆண்டு வன்னி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதில் இருந்து அங்கு படையினர் நிலைகொண்டுள்ளனர்.
எனவே புதிதாக ஒரு கோரிக்கையை சம்பந்தன் விடுப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், படையினர் வடக்கை கைப்பற்றாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் புலிகளின் கீழேயே செயற்படவேண்டி இருந்திருக்கும் என்றும் கோத்தபாய சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment