Thursday, September 19, 2013

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Thursday, September 19, 2013
இலங்கை::மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை தேர்தல்கள் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதன் பிரகாரம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளுக்காக 0112 877 073 என்ற தொலைபேசி இலக்கத்தையும், மாத்தளை மாவட்டத்திற்கு என 0112 877 074       என்ற இலக்கத்தையும், நுவரெலியா மாவட்டத்திற்கு என 0112 877 075 என்ற இலக்கத்தையும் தேர்தல்கள்   செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 
கண்டி மாவட்டத்திற்காக 0112 877 047 என்ற தொலைநகல் இலக்கமும், மாத்தளை மாவட்டத்திற்காக 0112 877 050 என்ற இலக்கமும், நுவரெலியா மாவட்டத்திற்காக 0112 877 051 என்ற இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
வட மாகாணத்திற்கான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காகவும் தேர்தல்கள் செயலகம் தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இதற்கமைய யாழ் மாவட்டத்திற்கு 0112 877 076 என்ற இலக்கமும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு   0112 877 078  என்ற இலக்கமும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு  0112 877 081 என்ற இலக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
அத்துடன் வட மாகாணத்திலிருந்து முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877 053, 0112 877 054, 0112 877 056  மற்றும் 0112 877 061 ஆகிய தொலைநகல் இலக்கங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
வட மேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877 065  என்ற இலக்கமும், புத்தளம் மாவட்ட முறைபாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877 069  என்ற இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
இந்த மாவட்டங்களில் இருந்து தொலைநகல் மூலம் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877 041  மற்றும்  0112 877 042  தொலைநகல் இலக்கங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளன. 

No comments:

Post a Comment