Tuesday, September 10, 2013
இலங்கை::பிரித்தானியாவில் இலங்கை - இந்திய கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டு வர பிரித்தானிய பொலிஸாருடன் பேச்சுவார்த்தை!
பிரித்தானியாவில் நடைபெற்ற இலங்கை - இந்திய கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டு வருவது பற்றி பிரித்தானிய பொலிஸாருடன் பேசிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர்.இந்த வழக்கு விசாரணை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் குறித்த சந்தேகநபரை மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த சந்தேகநபரை மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர்.
சந்தேகநபரான லோகேஸ்வரன் மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவந்தனர்.
ஆகையால், ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களான குலதீபன் மற்றும் உதயன் ஆகியோரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அன்று அனுமதி கோரியிருந்தனர்.
இதேவேளை, புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 30 ம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
யசோதரா சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 08 ம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார்.
அவருக்கு எதிரான வழக்கு ஜூன் 30 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.
இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை ஜுலை 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு லோகேஸ்வரன் மணிமாறன் வருகை தந்தால் கைது செய்யுமாறு ஜூன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், வழக்கு விசாரணை செப்டெம்பர் 23 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

No comments:
Post a Comment