Sunday, September 22, 2013

வடமேல் மாகாணசபையில் விருப்பு வாக்குகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தயாசிறி ஜயசேகர முன்னிலை!

Sunday, September 22, 2013
இலங்கை::வடமேல் மாகாணசபையில் விருப்பு வாக்குகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தயாசிறி ஜயசேகர முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கட்சி மாறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தானே வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் என சவால் விடுத்தார்.

இந்நிலையில் வடக்கைப் போலவே இம்முறை இடம்பெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு எங்கும் போக மாட்டேன் என கூறிக் கொண்டிருந்த தயாசிறியின் கட்சி தாவலும், அவரது சூளுரைகளும் அதற்கான காரணமாக அமைந்தன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர விருப்பு வாக்குகளின் படி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனான ஜொஹான் பெர்ணான்டோவிற்கும் தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் போட்டிநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தயாசிறி ஜயசேகர முதன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

No comments:

Post a Comment