Wednesday, September 11, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் இரகசிய உறவு காணப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்கு தேர்தலில் வெற்றியீட்டச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி உதவியளிக்கும் என ஆளும் கட்சி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இரகசிய உறவுகள் பற்றிய உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment