Wednesday, September 11, 2013
ஜம்மு::காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் சமீபத்தில் 5 இந்திய வீரர்களை சுட்டுக்கொன்றனர். உடனே இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லைகள் மீது திருப்பி தாக்கினர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால் இருநாடுகளுடைய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிலிருந்து தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இருதரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் பூஞ்ச் மாவட்ட எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் உள்ள 5 இந்திய நிலைகள் மீது துப்பாக்கி மற்றும் நடுத்தர வகை ஆயுதங்கள் கொண்டு பாகிஸ்தான் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது. அப்போது சிறிய ராக்கெட்டுகள் மூலம் கையெறிக் குண்டுகளும் வீசப்பட்டன. இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இதன் பாதிப்புகள் குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை. இந்த வருடம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், இதுவரை 90 முறை எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

+soldiers+patrol+along+the+border+-India_pakistan_.jpg)

No comments:
Post a Comment