Friday, September 13, 2013
இலங்கை::புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனது புகைப்படம் தாங்கிய துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்ததாகக்கூறி (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சுமார் 40 பேர் வரையினில் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(புலி)கூட்டமைப்பின் இறுதிக் கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் குடாநாடு முழுவதும் தொடர் பிரச்சாரங்களை செய்யவென (புலி)கூட்டமைப்பின் வேட்பாளர்களான சுகிர்தன் மற்றும் அனந்தியினது ஆதரவாளர்கள் 40 பேர் வரை வாகனமொன்றில் சுற்றிச்சுழன்று வருகின்றனர்.
அக்குழுவினர் இன்று கொடிகாமம் நகரப்பகுதியினில் பிரச்சாரங்களினில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களது வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
(புலி)கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ வெளியீடான வீடு பத்திரிகையில் பிரபாகரனது படமும் பொறிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment