Saturday, September 07, 2013
இலங்கை::சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் இவர்கள் மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதற்கு முன்னதாக சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 4 பிரதான சந்தேகநபர்கள் கைது!
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 4 பிரதான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் இரண்டு குழுக்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த 25 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 14 பேர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.
இந்த விசாரணைகளின்போது கிடை
த்த தகவலுக்கு அமையவே சந்தேகநபர்கள் நால்வரும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்,
சந்தேகநபர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில்ஹெரொயின் போதைப் பொருள் வைத்திருந்த மூவர் கைது!
முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரொயின் போதைப் பொருள் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்குளியில் மேல் மாகாண ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஹெரொயின் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய இருவரும் முகத்துவாரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment