Thursday, September 19, 2013
இலங்கை::இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை ஜனதா பட்டிணம் பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
5 படகுகளில் காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்களே நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.

No comments:
Post a Comment