Thursday, August 29, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனது பத்திரிகைகளும் வெளியில் எங்கேனுமிருந்து மந்திர மாங்காய்கள் வந்து விழும் என்ற கனவை ஊட்டியபடி தமிழ் மக்களை மேலும் மேலும் புதைகுழிப் பாதையிலேயே அழைத்துச் செல்கின்றனர். காலத் துக்குக் காலம் ஏதாவது ஒரு ஏமாற்றைக் கண்டுபிடித்து மக்களுக்குப் போலியான ஒரு நம்பிக்கையை வழங்குகிறார்கள்.
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனது பத்திரிகைகளும் வெளியில் எங்கேனுமிருந்து மந்திர மாங்காய்கள் வந்து விழும் என்ற கனவை ஊட்டியபடி தமிழ் மக்களை மேலும் மேலும் புதைகுழிப் பாதையிலேயே அழைத்துச் செல்கின்றனர். காலத் துக்குக் காலம் ஏதாவது ஒரு ஏமாற்றைக் கண்டுபிடித்து மக்களுக்குப் போலியான ஒரு நம்பிக்கையை வழங்குகிறார்கள்.
மக்களுக்கு யதார்த்த நிலைமைகளை உணர்த்தி விழிப்பூட்ட வேண்டிய ஊடகங்களும் இதற்குத் துணைபோவதுதான் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் மகா அவலம்.
வருடா வருடம் மார்ச் மாதத்தில் ஜெனீவா மாநாடு வரும்போது, மூன்று நான்கு மாதங்களுக்கு அந்தக் குதிரையிலேயே தமிழ் மக்களின் நம்பிக்கைகள் அனைத்தையும் அள்ளியெடுத்துச் சென்று கட்டிவிட்டு, இதோ தமிழ் மக்களுக்கான தீர்வுக் கோட்டை முந்தி ஓடிவந்து தொடப்போகிறது பார் குதிரை என்று பரபரப்போடு பார்த்திருக்க வைக்கிறார்கள்.
மார்ச் மாத முடிவில், இவர்கள் விசிலடித்துக் கத்திக் காண்பித்துக் கொண்டிருந்தது மண்குதிரையைத்தான் என்பது தெரிந்து விடுகிறது. அதைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. மக்களை அப்படியே கண்களைக் கட்டியபடி செப்டெம்பர் நியூயோர்க் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
ஐ.நா. மாநாட்டுத் திருவிழாவிலும் இலங்கை அரசு கவிழ்கிறது, தமிழர்க்குத் தீர்வு வந்து சேர்கிறது என்ற பஜனையை ஓங்கி ஆரம்பித்து, மக்களை ஒரு மூன்று மாதங்களுக்கு விறு விறுப்பூட்டிப் பின்னர் எல்லாம் புஸ்ஸ்ஸ் என்று ஆக, சிறிது காலம் காணாமல் போய்விடுகிறார்கள். பின்னர் யாராவது ஒரு வெளிநாட்டு இராஜதந்திரி நாட்டுக்கு வரும்போது ஓய்வை முடித்துக்கொண்டு மீண்டும் உசாரடைகிறார்கள்.
அவரது ஒவ்வொரு வாக்கியத்தையும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைத்து, தமிழ் மக்களுக்கு நல்லகாலம் வருகுது… நல்லகாலம் வருகுது என்று குடுகுடுப்பை அடிக்கிறார்கள். தமிழ் மக்கள் அதையும் நம்பிச் சிலகாலம் காத்திருக்க வைக்கப்படுகிறார்கள். அதே மாதிரியில்தான் இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையையும் ஏதோ ரட்சகரின் வருகையைப் போல பில்டப் கொடுக்கிறார்கள்.
தகவல்களைத் திரட்டுவதில் நவநீதம்பிள்ளை மும்முரம் என்று ஒரு பத்திரிகை தலைப்புச் செய்தி போடுகிறது. அந்தச் செய்தியின் பின்னால் மறைந்திருக்கும் தமிழ் மக்களை ஏமாற் றுகின்ற நோக்கம் அப்பட்டமானது. அவர் ஐ.நா. திரும்பியதும் இலங்கை அரசு தண்டிக்கப்படப் போகிறது; அதற்கே நவநீதம் பிள்ளை தகவல்கள் சேகரிக்கிறார் என்று மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுப்பதே நோக்கம்.
உண்மை என்னவென்றால் நவநீதம்பிள்ளை அவர்கள் ஒன்றும் இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய நிறுவனத்தின் பிரதிநிதி அல்ல. ஐ.நா. மனித உரிமை அமைப்பானது யார் யாருடைய நெருக்குவாரங்களின் பேரில் தீர்மானங்களை உருவாக்குகிறது; யாரெல்லாம் அதை நீர்த்துப்போக செய்கிறார்கள்; ஒரு சின்ன விசாரணை என்றாலே எப்படி சுற்றிவளைத்து மூக்கைத் தொட முயல்கிறார்கள் என்பதையெல்லாம் கடந்த இரண்டு வருடங்களாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.
இதெல்லாம் தெரிந்த பிறகும், தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தருவதற்காக ஒரு சர்வதேசப் பேருருவின் வருகை நிகழ்ந்துள்ளது இதோ நாங்கள் சொன்ன சர்வதேசப் போராட்டம் ஆரம்ப மாகிவிட்டது என மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது எவ்வளவு பெரிய வஞ்சகம்!





No comments:
Post a Comment