Wednesday, August 21, 2013
இலங்கை::சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் ஆபத்தான பயணங்கள் குறித்து அவுஸ்திரேலியா கிழக்கு மாகாணத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசூரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட உள்ளது.
அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் பிரவேசிக்கும் எவருக்கும் புகலிடம் வழங்கப்பட மாட்டாது எனவும், உடனடியாக அவர்கள் பபுவா நியூகினித் தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர் சட்டங்களில் திருத்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புகலிடக் கோரிக்கையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் பபுவா நியூகினித் தீவுகளில் குடியேற்றப்படுவர் என தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் செலுத்தும் பணம் வீண் விரயமாகும் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் போலிப் பிரச்சாரத்திற்கு ஏமாறக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment