Wednesday, August 14, 2013
இலங்கை::வடக்கில் விக்கினேஸ்வரனை வைத்துக் கொண்டு கூட்டமைப்பால் அரங்கேற்றப்படும் புதிய ஈழப்போராட்ட நாடகத்தை தோற்கடிக்கும் முக்கிய தேர்தலே இத்தேர்தலாகும். இதன்படி நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் இத்தேர்தலின்போது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியலமைப்பினூடாக வெற்றிபெற நினைக்கும் ஈழப்போராட்டத்தை தோற்கடிப்பதுடன் இத்தேர்தலினூடாக நாட்டிற்காக சேவை செய்யக்கூடிய தலைவர்களை உருவாக்க வேண்டியது மக்களிடமுள்ள பாரிய பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய மாகாண சபை தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment