Thursday, August 22, 2013

மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமாக நடத்துவதற்கே நாம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்: வடமாகாண சபைத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடு இருக்காது: மகிந்த தேசப்பிரிய!

Thursday, August 22, 2013
இலங்கை::மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை நீதியானதும் நேர்மையானதுமாக நடத்துவதற்கே நாம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம் என்பதுடன் வடமாகாண சபைத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடு இருக்காது என்று தேர்தலகள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ் பொது நூலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் தொடர்பிலான சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமனற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம். இத் தேர்தலில் அரச அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்றும் அலுவலர்களுக்;கான பயிற்சி வழங்கியுள்ளளோம்.

இந்தச் சந்திப்பில் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் 3 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.  இதற்கான காலத்தை  நீடிக்குமாறு வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தற்காலிக அடையாள அட்டை விநியோகம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் யாழ் மாவட்டத்தில் சண்டிலிப்பாய், நெடுந்தீவு, பருத்தித்துறை,வேலணை,சாவகச்சேரி ஆகிய 5 பிரதேச செயலர் பிரிவில் முறைப்பாட்டுப் பிரிவொன்று ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதன் மூலம் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இந்த அலுவலகத்திலோ அல்லது தேர்தல் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையம் என்பற்றிலோ எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டக்கொண்டார்.

நாவந்துறைப் பகுதியில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில்  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

அவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை தேர்தல் விடயத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தேர்தல் வன்முறை தொடர்பில் எவ்விதமான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் யாழில் நெடுந்தீவுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் மூலம் அறியப்பட்டதாகவும் நேற்றைய தினம் கூட்டமைப்பின் வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு சென்று அது பற்றி ஆராயப்படும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment