Thursday, August 15, 2013

நடுக்கடலில் இந்திய எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்ததால் பரபரப்பு!!

Thursday, August 15, 2013
புதுடெல்லி:எண்ணெய் தேவைகளுக்கு பெரும்பா லும் வெளிநாடுகளையே நம்பி இருப்பதால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா உள்பட ஒரு சில நாடுகளுக்கு அமெரிக்க விலக்கு அளித்துள்ளது. இருப்பினும் அமெரிக்க நெருக்கடி காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது. இது ஈரானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

‘பொருளாதார நெருக்கடிகள் தொடருமானால் பெர்ஷியன் கடல் பகுதியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதை தடுத்து நிறுத்துவோம்’ என அந்நாடு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஈராக் நாட்டிலிருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான தேஷ் சாந்தி என்ற கப்பல் நேற்று இந்தியா புறப்பட்டது. பெர்ஷியன் வளைகுடாவில் சர்வதேச கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஈரான் கடற்படை கப்பல்கள், இந்திய கப்பலை சுற்றிவளைத்து சிறைபிடித்தன. ஈரான் கடல் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக இந்திய கப்பல் மீது ஈரான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச கடல் பகுதியில் சென்ற கப்பல், ஈரான் கடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக  தெரிவித்திருப்பது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே, இந்திய கப்பலை மீட்பதற்கான நடவடிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
 
ஈராக் நாட்டில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு புறப்பட்ட இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான தேஷ் சாந்தி என்ற கப்பலை பெர்ஷியன் வளைகுடாவில் ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சவுதி அரேபியா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஈரான் இருந்தது. சர்வதேச எச்சரிக்கையை மீறி அணுசக்தி திட்டங்களை ஈரான் நிறைவேற்றி வருவதன் காரணமாக, அதன் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதனால் அந்த நாட்டிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது.

No comments:

Post a Comment