Monday, August 26, 2013

பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் மற்றும் நீதித்துறை முக்கியஸ்தர்களை சந்தித்தார் நவனீதம் பிள்ளை!

Monday, August 26, 2013
இலங்கை::இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை இன்று பிரதம நீதியரசர், சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையிலான சந்திப்பு உயர்நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ அறையில் நடைபெற்றுள்ளது.
 
பின்னர் சட்டமாஅதிபர் திணைக்களத்திற்கு சென்ற நவனீதம் பிள்ளை, சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோவுடன் கலந்துரையாடியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகருக்கும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.நீதி அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
 
எவ்வாறாயினும் இந்த கலந்துரையாடல்களின்போது கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் உடனடியாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
 
 
 

No comments:

Post a Comment