Monday, August 26, 2013
இலங்கை::யுத்தத்தின் தன்மை, இழப்பு எல்லாவற்றையும் அறிந்தவர்கள் நாம். ஆனால் சிலர் மக்களின் அபிலாசைகளை பயங்கரவாத அபிலாசைகளாக மாற்ற விரும்புகின்றனர் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
எழுது மட்டுவாள் பிரதேசத்தில் இராணுவ பயன்பாட்டில் இருந்த வீடுகள், காணிகளை கையளிக்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
யுத்தம் நிறைவடைந்து சமாதானம் தற்போது காணப்படுகின்றது. அதனால் வடக்கில் இன்று இராணுவ காவலரண்கள், சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்.
மீண்டும் நாட்டில் யுத்தமோ, பயங்கரவாதமோ தோன்ற கூடாது. நாமெல்லாம் யுத்தத்தின் தன்மை இழப்பு எல்லாவற்றையும் அறிந்தவர்கள்.
ஆனால் சிலர் மக்களின் அபிலாசைகளை பயங்கரவாத அபிலாசைகளாக மாற்ற விரும்புகின்றனர். சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பேதமின்றி நாம் அனைவரும் சமாதானமாக வாழவேண்டும்.
52 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள பிரதேசம் கூடிய விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
அதேவேளை 523 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள மந்துவில் பிரதேசத்தில் உள்ள காணிகளும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment