Wednesday, August 21, 2013

ஆஸ்திரேலியா அருகே அகதிகள் படகு கடலில் மூழ்கியது: 5 பேர் பலி!

Wednesday, August 21, 2013
சிட்னி::இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருகின்றனர். அவர்கள் வரவேண்டாம் என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

இருந்தும் கள்ளத்தனமாக படகுகளில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைகின்றனர். அப்படி வரும் பல படகுகள் நடுக் கடலில் மூழ்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

அது போன்று ஒரு சம்பவம் நேற்று நடந்தது. 105 பேருடன் ஒரு அகதிகள் படகு ஆஸ்திரேலியாவுக்கு வந்தது. 220 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் வந்த போது அப்படகு கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்ததும் ஆஸ்திரேலிய கடற்படை பாதுகாப்பு வீரர்கள் படகுகளில் அங்கு விரைந்து சென்றனர். மூழ்கி கொண்டிருந்த படகில் இருந்த 100 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் 5 பேர் மட்டும் கடலில் மூழ்கி பலியாகி விட்டனர். அவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment