Tuesday, August 13, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 24 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்பில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த 24 ஆவது கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகளின் பூலோக காலக்கிரம மீளாய்வு தொடர்பில் ஆராயப்படவுள்ளன.
47 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள நிலையில் உறுப்புரிமையற்ற நாடுகள் சிலவற்றின் பிரதிநிதிகளும் விசேட கூற்றுக்களை வெளியிடவுள்ளனர். சில நாடுகளுக்கு எதிராக விசேட பிரேரணைகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இலங்கையை பொறுத்தவரை இம்முறை கூட்டத் தொடரில் அமைச்சர்கள் மட்டத் தூதுக்குழுவா அல்லது அதிகாரிகள் மட்ட தூதுக்குழுவா கலந்துகொள்வது என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இது தொடர்பில் இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்மானிக்கப்படும் என்று தெரியவருகின்றது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அதிகாரிகள் மட்டத் தூதுக்குழுவே கலந்துகொண்டிருந்தது.
எனினும் இவ்வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற பேரவையின் 22 அவது கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் மட்ட குழு கலந்துகொண்டிருந்தது. மனித உரிமை விவகாரம் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவரான மஹிந்த சமரசிங்க தலைமையிலான தூதுக் குழுவே 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், 24 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பார் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் தற்போது அவர் அறிக்கை சமர்ப்பிக்கமாட்டார் என்றும் விசேட கூற்றையே வெளியிடுவார் என்றும் தெரியவருகின்றது.

அதற்கு முன்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அந்தவகையில் இலங்கை தொடரில் பேரவையின் கூட்டத் தொடர்பில் நவநீதம்பிள்ளை ஆற்றவுள்ள உரை முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.

No comments:
Post a Comment