Friday, July 12, 2013

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் உறுதி!

Friday, July 12, 2013
இலங்கை::இலங்கை பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி அனுஜ்சிங்க் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
இதன் போது, இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பெரிதும் பாராட்டியதுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை நல்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறுகையில், இலங்கையைக் கு
றுகிய காலத்தில் நீங்கள் சிறந்த அபிவிருத்தி நிலைக்குக் கொண்டு வந்துள்Zர்கள். இதனை நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். சில வருடங்களுக்கு முன்னர் நான் இங்கு விஜயம் செய்த போது இருந்ததை விட நாட்டில் இப்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொருளாதார அபிவிருத்தியில் நீண்டகால நிலையான தன்மையை அடைவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டில் உலக பொருளாதார வளர்ச்சியின் மையமாக ஆசியா விளங்குவதால் சீனா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானமானது மிகச் சரியானது எனவும் அவர் கூறினார்.
 
இச்சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்ததாவது மூன்று நான்கு வருடங்களாகத் திருப்திகரமான நிலையை அடைந்துள்ளது. ஆயினும் அதிகரித்த எண்ணெய் விலையும், காலநிலை மாற்றமுமே எமக்குப் பிரச்சினைகளாக உள்ளன. என்றாலும் வீதி அபிவிருத்தி, மின்வசதி, தொலைத் தொடர்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. அதன் பலாபலன்களை எமது மக்கள் இப்போது அனுபவிக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment