Sunday, June 9, 2013

வடமாகாண சபையின் அமைச்சுப்பதவிகளுக்கு பேரம்! தமிழரசுக் கட்சி - (புலி)கூட்டமைப்பு பதிவு தொடர்பான பேச்சுக்கள் இடைநிறுத்தம்!

Sunday, June 09, 2013
இலங்கை::வடமாகாண சபைக்கான தேர்தல் ஒன்று நடைபெற்றால் தமக்கும் மாகாண சபையில் அமைச்சசுப் பதவிக்களை வழங்கவேண்டும் என தமிழரசுக் கட்சியுடன் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைவாகவே தமிழ்த் தேசிய (புலி) கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பான பேச்சுக்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்யுமாறு தமிழரசுக் கட்சிகளை ஏனைய தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்பொழுது அந்த விடயங்கள் தொடர்பான பேச்சுக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வடமாகாண சபைக்குத் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின் தமக்கும் மாகாண சபையில் அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும் என தமிழரசுக் கட்சியிடம் ஏனைய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதற்கு கட்சியின் மூத்த அரசியல் வாதிகளும் சாதகமாகப் பதிலளித்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதிகளின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் தெரிவிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பொது வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பான பேச்சுக்களும் நடைபெற்றுள்ளன. இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரனி வி.ரி.தமிழ்மாறன், முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன், மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் ஆகியோரின் பெயர்களை தமிழரசுக் கட்சியினர் சிபார்சு செய்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் பொதுவேட்பாளரை நியமித்தால்  தமக்கு வடமாகாண சபையில் பிரதான அமைச்சுப் பதவிகளைத் தரவேண்டும் எனவும் பலமான கோரிகையினை முன்வைத்துள்ளனர்.
 
இந்நிலையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியில் மூத்த சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன. இப்பேச்சுக்களின் போது தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கும் மாகாணசபை முக்கிய பதவியைத் தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.அவ்வகையினில் சுரேஸ்பிறேமச்சந்திரன் தனது தம்பிக்கு அமைச்சு பதவி கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை மாகாணசபையின் அமைச்சுப் பதவிகள் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருவதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பதிவு தொடர்பான பேச்சுக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கத் தவறிவருகின்றது எனவும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment