Saturday, June 22, 2013

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: ஓமன் விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம்!

Saturday, June 22, 2013
மும்பை::ஓமன் நாட்டு பயணிகள் விமானம் இன்று மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் 190 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் இந்திய வான்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமானிக்கு தகவல் வந்ததாகத் தெரிகிறது.

இதனால் பதட்டம் அடைந்த விமானி, அருகில் உள்ள மும்பை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததையடுத்து மும்பையில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் உள்ள பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்களும், தீயணைப்பு வீரர்களும் விமானத்தின் உள்ளே சென்று சோதனை செய்தனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment