Friday, June 28, 2013
இலங்கை::இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் பிரதீபா மஹானாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொள்ளும் வகையில், 1996ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான பிரேரனை தற்போதும் தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரங்களில் அதனை அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை அமுலாக்கும் வகையிலான மூன்று திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment