Monday, June 3, 2013

அநுராதபுரம் விமானதளத்தில் கடமையாற்றிவந்த விமானப்படை வீரர் ஒருவர் கைகுண்டொன்றை வெடிக்க வைத்து தற்கொலை!

Monday, June 03, 2013
இலங்கை::அநுராதபுரம் விமானதளத்தில் கடமையாற்றிவந்த விமானப்படை வீரர் ஒருவர் கைகுண்டொன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளார்.
 
அநுராதபுரம் விமானதளத்தில் கடமையாற்றிவந்த விமானப்படை வீரர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக விமான படைபேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணைக்கு புறம்பாக விமானப் படையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தின் போது வேறு எவரும் காயமடையவில்லை என விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment