Sunday, June 30, 2013

சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கு வட மாகாண ஆளுநர் ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி துவிச்சக்கரவண்டிகளை வழங்கினார்!

Sunday, June 30, 2013
இலங்கை::வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு 29 யூன் 2013 அன்று நடைபெற்றது.
வடமாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். விஸ்வரூபன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கினார்.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யுத்தத்தினாலும் குடும்ப வறுமையினாலும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து  பின் பெற்றோரிடம் இணைத்துக்கொள்ளப்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.வரதீஸ்வரன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
 

No comments:

Post a Comment