Saturday, June 8, 2013

மீனவர்கள் பிரச்னைக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : திருமாவளவன்!

Saturday, June 08, 2013
துரைப்பாக்கம்::அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மீனவர்கள் பிரச்னைக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திருமாவளவன் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கருப்பு சூலை 30ம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் தலைமை வகித்தார். இளையவளவன், எழிலரசு, முகமது ஹனீபா, ரஜினி, கிட்டு, தென்னவன், பூவிழி, இளைஞன், மேனகா தேவி கோமகன், இந்திரா அம்பேத்கர் வளவன், தேவ அருள்பிரகாசம், பனையூர் பாபு, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழரசன், விடுதலை ஆரோன், மதிவளவன், கதிர், பாலசுப்பிரமணி ஆகியோர் வரவேற்றனர். கருத்தரங்கில் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது:

இலங்கையில் 1983 ஜூலை 23ம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டது. தீ வைத்து எரிக்கப்பட்டது. பெண்கள் பலாத்காரப்படு

இலங்கையில் நடப்பது இனவெறி. அதற்கு இணையாக தமிழகத்தில் ஜாதி வெறி நடக்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் திட்டமிட்டு ஜாதி வெறியை தூண்டி விடுகிறார்கள். எங்களுக்கு தலித் பாதுகாப்பும், ஈழ பாதுகாப்பும் ஒன்றுதான். திவ்யா- இளவரசனை திட்டமிட்டு பிரித்தனர். தாய் மனதை மாற்றியதே பாமகதான். யாரும் யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இவர்கள் பிரித்து அழைத்து செல்வார்களாம். இது என்ன நாகரீகம். இதுதான் ஜாதி கவுரவமா?

தமிழகத்தில் ரஜினியை பொதுமக்கள் எப்படி பார்க்கிறார்களோ அப்படித்தான் தேசியவாதிகள் பிரபாகரனை பார்க்கிறார்கள். ஆனால் விடுதலை சிறுத்தைகள், பிரபாகரனை அப்படி பார்ப்பதில்லை. தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படு கிறார்கள். அவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு கடுமையான முடிவை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரையும் அழைத்து மீனவர்களின் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார். கருத்தரங்கில் சிந்தனை செல்வன், ரவிக்குமார், முகமது யூசுப் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராசே.சுகுமார் நன்றி கூறினார்.

த்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதை நினைவு கூர்ந்து கருப்பு சூலை கருத்தரங்கம் இங்கு தொடங்கி உள்ளது. ஜூலை இறுதி வரை, வாரம் ஒரு கருத்தரங்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ளது.

No comments:

Post a Comment