Monday, June 10, 2013
புதுடெல்லி::ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சாண்டிலா ஆகிய 3 பேரை டெல்லி போலீசார் கடந்த மாதம் 15ம் தேதி கைது செய்தனர். இவர்கள் புக்கிகளிடம் இருந்து ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பெற்று கொண்டு ஸ்பாட் பிக்சிங் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 25க்கும் மேற்பட்ட சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான புக்கிகளிடம் நடத்திய விசாரணையில், சூதாட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது கள்ளநோட்டுகள் எனவும் அவை பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு அரபு நாடுகள் வழியாக வங்கதேசத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இந்தியாவில் உள்ள சூதாட்ட புக்கிகளுக்கு சப்ளை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே பாலிவுட் நடிகர் விண்டு தாராசிங், சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் ஆகியோரும், ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணி உரிமையாளரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா தனது நண்பரும் தொழில் முறை பார்ட்னருமான கோயங்காவுடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பிசிசிஐ விதிகளில், அணியின் உரிமையாளரால் போட்டிக்கு ஏதாவது பிரச்னை வந்தால் அந்த அணியை தொடரில் இருந்து நீக்கலாம் என உள்ளது. அதன்படி ராஜஸ்தான், சென்னை அணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் பிசிசிஐ அவசர செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இதற்கிடையே, ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக பிசிசிஐயின் ஊழல் தடுப்பு குழு சேர்மன் ரவி சவானி விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், சாண்டிலா ஆகிய 3 கிரிக்கெட் வீரர்களும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது உண்மைதான். இந்த 3 வீரர்களுக்கும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வாழ்நாள் தடை விதிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று டெல்லியில் நடைபெறும் பிசிசிஐ அவசர செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment