Saturday, June 22, 2013
இலங்கை::இலங்கைப் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதீவ் தேவ நதுன் தர்மவிக்ரம என்னும் 42 வயதான கொஸ்கொட நதுன் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தாலியின் மிலான் வெனித்தியா பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக குறித்த நபர் கருதப்படுகின்றார். சந்தேக நபருக்கு எதிராக இன்டர்போல் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மூன்று பேரை குறித்த நபர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment