Saturday, June 22, 2013
சென்னை::குன்னூர்:நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் ச
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது. அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது.
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் மீண்டும் போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். வரும் 25ம் தேதி வைகோ தலைமையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
போராட்டம் எதிரொலியாக தற்போது ராணுவ முகாமை சுற்றிலும் உள்ளூர் போலீசார் ராணுவ வீரர்களுடன் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 18 நாட்களாக ராணுவ முகாம் எல்லைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறிவிக்கப்படாத ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 நாட்களாக நடக்கும் இந்த போராட்டம் குறித்து பிரதமருக்கும், ராணுவ அமைச்சகத்துக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரச்னை ஏற்படும் பட்சத்தில் இலங்கை அதிகாரிகளை பெங்களூருக்கு மாற்றி பயிற்சி அளிக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். சென்னை::குன்னூர்:நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் ச
இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது. அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது.
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் மீண்டும் போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர். வரும் 25ம் தேதி வைகோ தலைமையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
போராட்டம் எதிரொலியாக தற்போது ராணுவ முகாமை சுற்றிலும் உள்ளூர் போலீசார் ராணுவ வீரர்களுடன் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 18 நாட்களாக ராணுவ முகாம் எல்லைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அறிவிக்கப்படாத ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 நாட்களாக நடக்கும் இந்த போராட்டம் குறித்து பிரதமருக்கும், ராணுவ அமைச்சகத்துக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரச்னை ஏற்படும் பட்சத்தில் இலங்கை அதிகாரிகளை பெங்களூருக்கு மாற்றி பயிற்சி அளிக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

No comments:
Post a Comment