Friday, June 7, 2013

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரமுடியுமே தவிர, அரசியல் பிரச்சினைகளை தீர்த்துவைக்க மந்திரக்கோல்' இந்தியாவிடம் இல்லை!

Friday, June 07, 2013
சென்னை::யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான  அடிப்படை வசதிகளை செய்து தரமுடியுமே தவிர, அரசியல் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முடியாது. அரசியல் தீர்வுக்கான 'மந்திரக்கோல்' இந்தியாவிடம் இல்லை  என்று இந்திய தூதுக்குழு தமிழ் மக்களுக்கு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கில் சமூகப் பிரதிநிதிகளை அவர்கள் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதுக்குழுவின் தலைவரான பாரதீய ஜனதா கட்சியின் ரவிசங்கர் பிரசாத், வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு அடிப்படை உதவிகள் அவசியமானவை என்றும் அதை செய்து தர இந்தியா தயாராக உள்ளதாகவும்  ஆனால் அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு தீர்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவிடம் அப்படிப்பட்ட 'மந்திரகோல்' ஒன்றும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்தியக்குழு வடக்கிலுள்ள அரசு பிரதிநிதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், படைத்தரப்பினர், சமூகக்குழுக்களின் உறுப்பினர்கள் என்று பல தரப்பையும் சந்தித்து  பல தரப்பட்ட நிலைப்பாடுகளை தெரிந்து கொண்டனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைப்பற்றி முழுதாக தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிய குழுவினர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களை ஹில்டன் ஹோட்டலில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment