Friday, June 28, 2013

சவுதி அரேபியாவில் தொழிலுக்குச் சென்று சட்டவிரோதாமாக அங்கு தங்கியிருக்கும் எண்ணாயிரம் இலங்கையர்களை நாட்டிற்கு திருப்பியழைக்க நடவடிக்கை!

Friday, June 28, 2013
இலங்கை::சவுதி அரேபியாவில் தொழிலுக்குச் சென்று சட்டவிரோதாமாக அங்கு தங்கியிருக்கும் மேலும் எண்ணாயிரம் இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு திருப்பியழைக்க வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகம் தீர்மானி்த்துள்ளது.
 
இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை ஏற்கனவே பூர்த்தி செய்துள்ளதாக பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளரும் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
 
தொழிலுக்காக சென்று சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் இரண்டாயிரத்து 200 பணியாளர்கள் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment