Wednesday, June 05, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை, பெலாரஸிற்கு ஆதரவளித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதியொருவர் பெலாரஸிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 23ம் அமர்வில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இது அரசியல் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டது எனவும் இலங்கைப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மெய்யாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்படவில்லை எனவும், பெலாரஸ் அரசாங்கத்தின் கருத்துக்கள் கோரப்படவில்லை எனவும் இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
பெலாரஸின் மனித உரிமை நிலைமைகள் மோசமாகக் காணப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவசர அவசரமாக மனித உரிமை நிலைமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இலங்கை அளித்த உதவிகளுக்கு பெலாரஸ் நன்றி பாராட்டியுள்ளது.

No comments:
Post a Comment