Sunday, June 16, 2013

அசத்தல் ஹாட்ரிக் வெற்றி : இந்தியாவிடம் பாக். சரண்டர்!!

Sunday, June 16, 2013
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று பர்மிங்காமில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய வீரர்களின் ஆக்ரோஷ பந்து வீச்சிலும் துடிப்பான பீல்டிங்கிலும் பாக். அணி மிரண்டது. நசீர் ஜம்ஷேத் 2, கம்ரன் அக்மல் 21, முகமது ஹபீஸ் 27, ஆசாத் ஷபீக் 41, மிஸ்பா 22, சோயிப் மாலிக் 17, வகாப் ரியாஸ் 0, சயீத் அஜ்மல் 5, ஜூனைத்கான் 0, முகமது இர்பான் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் பாக். இணி 39.4 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. உமர் அமீன் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணிக்கு 40 ஓவரில் 168 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஷிகார் தவான்ரோகித் ஷர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 2 முறை மழை மீண்டும் குறுக்கிட்டதால் 22 ஓவரில் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ரோகித் ஷர்மா 18, ஷிகார் தவான் 48 ரன் சேர்த்து ஆட்டமிழந்தனர். கோஹ்லி 22, தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் சேர்க்க முடிவில் இந்திய அணி 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணியை முதன் முறையாக வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது புவனேஷ்வர்குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்திய அணி 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பி பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பிரிவில் இருந்து இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி மோதிய 3 ஆட்டத்திலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

கேப்டன்ஸ் கார்னர்:

டோனி: பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்துமே சிறப்பாக இருந்தது. தற்போதைய சூழ்நிலையில் பீல்டிங்களில் நாங்கள் தான் சிறந்த அணியாக உள்ளோம். புவனேஷ்வர்குமார் சரியான திசையில் பந்துகளை வீசி ஸ்விங் செய்தார். இதை அவர் தொடர் முழுவதும் செய்ய வேண்டும்.

மிஸ்பா: மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். மழையும் பாதகமாக அமைந்தது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை.

No comments:

Post a Comment