Monday, June 10, 2013

தீப்பற்றிய உடம்புடன் முன்னாள் கணவனை கட்டிப்பிடித்த மனைவி!!

Monday, June 10, 2013
இலங்கை::பொர­லந்த ஸ்ரீ நாராங்­கல பிர­தே­சத்தில் விவா­க­ரத்து பெற்ற மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீயிட்ட போது அந்த நபரை பாய்ந்து கட்­டிப்­பி­டித்­ததால் இரு­வரும் கடு­மை­யான தீக்­கா
­யங்­க­ளுடன் வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நபர் சில காலத்­துக்கு முன்னர் விவா­க­ரத்து பெற்­றுள்ளார். ஏதோ­வொரு பிரச்­சி­னையைத் தீர்க்க பொர­லந்த பிர­தே­சத்­தி­லுள்ள முன்னாள் மனை­வியின் வீட்­டுக்குச் சென்­றுள்ளார். அங்கு இரு­வ­ருக்­கு­மி­டையே வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டதை அடுத்து அந்­நபர் முன்னாள் மனை­வியின் மீது பெற்­றோலை ஊற்றி தீயிட்­டுள்ளார்.

தீப்­பற்றி எரியும் நிலையில் அந்தப் பெண் பாய்ந்து முன்னாள் கண­வனை கட்டிப் பிடித்­ததால் இரு­வரும் கடு­மை­யான தீக்­கா­யங்­க­ளுடன் திய­த­லாவ வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ளனர். பொர­லந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த 43 வயது பெண்ணும் மாதொட்­டில்ல பிர­தேத்தைச் சேர்ந்த 55 வயது நப­ருமே இவ்­வாறு தீக்­கா­யங்­க­ளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர். வெலிமடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment