Sunday, June 30, 2013

தீவிரவாத ஒழிப்பு குறித்து இங்கி. பிரதமர் கேமரூன் ஆப்கனில் பேச்சுவார்த்தை!!

Sunday, June 30, 2013
காபூல்::இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆப்கானிஸ்தான் வந்தார். இங்கு நேட்டோ படையினரையும், அதிபர் கர்சாயையும் சந்தித்து பேசினார்.ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் நேட்டோ படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படையில் இங்கிலாந்து வீரர்களும் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 2 நாள் பயணமாக ஆப்கானிஸ்தான் வந்தார். அங்கு அவர் தெற்கு மாகாண பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேட்டோ படையின் தளபதி நிக் கார்டரை சந்தித்து நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கனில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல், தீவிரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் குறித்து அதிபர் ஹமித் கர்சாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் நேட்டோ படைகள் வெளியேற உள்ளன. அதன் பிறகு தீவிரவாத பிரச்னைகளை ஆப்கன் ராணுவம் நேரடியாக எதிர்கொள்ளும். இந்த சூழலில் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு நடத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.அதன்பின்னர் டேவிட் கேமரூன் பாகிஸ் தான் சென் றார். பாகிஸ்தானில் 2 நாள் தங்கும் கேமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் ஆப்கன் நிலைமைகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்திக்கிறார்.

No comments:

Post a Comment