Sunday, June 02, 2013
சென்னை::இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் விசேட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை::இந்தியாவின் எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் விசேட பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் இந்த விஜயம் அமையலாம் என்று த இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
எனினும் இது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும் பாரத ஜனதா கட்சியின் தகவலின்படி, இந்த குழு, இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட தரப்பினர்களை சந்திக்கவுள்ளது.
அத்துடன் வடமாகாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது..
வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் அடங்கிய 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்;சியின் முக்கியஸ்தரான ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட 06 பேர் அடங்கிய இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று 05 நாள் விஜயமாக எதிர்வரும் 04 ஆம் திகதி இலங்கை செல்லவுள்ளது.
இந்த குழுவில் சிவசேனா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய இந்திய தேசிய அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும் அடங்குகின்றனர். இவர்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

No comments:
Post a Comment