Monday, June 10, 2013
சென்னை:.இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கும் செயலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் (புலி பினாமி) வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
குன்னூர் வெலிங்டனில் இலங்கை ராணுவத்தின் விங் கமாண்டர் பண்டார தசநாயகேவுக்கும், மேஜர் ஹரிசந்திராவுக்கும் மே 27ம்தேதி முதல் இந்திய ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மக்களும், தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு மத்திய அரசு பயிற்சி கொடுப்பது மன்னிக்க முடியாத துரோகம்.
தமிழகத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து மத்திய அரசு இந்த அக்கிரமத்தை செய்கிறது. இலங்கை ராணுவத்துக்கு தமிழகத்தில் பயிற்சி தருவதில்லை என்று மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோனி தமிழகத்தில் பேசியுள்ளார். அப்படியானால் ராணுவ நடவடிக்கைகள் அமைச்சருக்கு தெரியாமல் நடக்கிறதா?.இலங்கை ராணுவத்தினரை உடனடியாக தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே வெளியேற்ற வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments:
Post a Comment