Tuesday, June 04, 2013
இலங்கை::இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் மத்தியஸ்த நிலைப்பாடு முடிவடைந்து பல வருடங்கள் கழிந்த போதும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வரு
இலங்கை::இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் மத்தியஸ்த நிலைப்பாடு முடிவடைந்து பல வருடங்கள் கழிந்த போதும் இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வரு
வதாக நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தாம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போது புலம்பெயர்ந்த (புலிகளின் ஆதரவாளர்களுடன்) தமிழர்களை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்துள்ள அவர் இலங்கை தொடர்பில் செய்திகளை அறிந்துக்கொள்ளும் தாம் அது தொடர்பானவர்களை சந்தித்து வருவதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தனித்தமிழீழம் என்றக்கோரிக்கையை நிராகரித்துள்ள சொல்ஹெய்ம், இலங்கையின் ஜனநாயக வரம்புக்குள் கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு எட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் வடக்குமாகாண சபைத்தேர்தலின்போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் தேவை என்று தம்மிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ் கட்சிகள் கோருவதாக சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை பிரச்சினை தீர்வில் சமாதானத் தூதுவர் பதவி வகிக்காத போதிலும் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்திருந்த போது புலம்பெயர் (புலிகளின் ஆதரவாளர்களுடன்) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment