Sunday, June 02, 2013
இலங்கை::இலங்கை - தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பாது காப்பு மற்றும் கடல் சார் பாதுகாப்பு விடயங்களில் இணைந்து செயற் படுவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களுக்கும் தாய்லாந்து பிரதமருக் குமிடையில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், அனுபவங் களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் பயங்கரவாதத்தையும் பிராந்தியம் எதிர்கொள்ளும் ஏனைய அச் சுறுத்தல்களையும் ஒழித்துக்கட்ட முடியுமென இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
2009 இல் யுத்தம் முடிவுற்றாலும் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையைத் துண்டாடுவதற்கு சர்வதேச கடற்பரப்பை உபயோகப்படுத்துவதைச் சுட்டிக்காட்டியே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் யின்லக் சினவாத்ராவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போதே இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு மற்றும் கடல் சார் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
பாதுகாப்புக்குத் தேவையான அனுபவம் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் 19வது மற்றும் 22வது ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தாய்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய உறுதியான ஆதரவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்து பிரதமருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியதுடன் இலங்கை அரசாங்கத்தின் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடுகளைச் செய்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் முன்வர வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன் போது கேட்டுக்கொண்டார்.
அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் வர்த்தக வாய்ப்புக்களை ஊக்குவிப்பதில் தாய்லாந்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் ‘சியம் நிகாய’ ஸ்தாபிக் கப்பட்டு 260 வருடங்கள் நிறைவடைவதை யொட்டி திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களின் ஒரு பகுதியாகவே தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் அமைந் துள்ளது.
ச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் பயங்கரவாதத்தை ஒழித்துள்ள இலங்கை அரசாங்கத்திற்குத் தம் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் இலங்கை சமாதானமும் சுபீட்சமும் நிறைந்த நாடாகக் கட்டியெழுப்பப்படுவதற்கு தாய்லாந்து தொடர்ந்தும் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
மேற்படி இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் குடிவரவு, சுற்றுலா, விஞ்ஞான தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வங்கியியல் துறைகள் தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
தாய்லாந்து தூதுக்குழுவில் அந்நாட்டின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சுரபொங் டொவிசக்சைக்ருல் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் டி.எம். ஜயரத்ன, அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, பசில் ராஜபக்ஷ, ரிசாட் பதியுதீன், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, பிரியங்கர ஜயரத்ன உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். ..
நேற்றுக்காலை தலதா மாளிகைக்கு மீண்டும் விஜயம் செய்த தாய்லாந்து பிரதமரை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் வரவேற்றனர். தலதா மாளிகையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர். அங்கிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் சென்ற அவர் நேற்று நண்பகல் நாடு திரும்பினார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த தாய்லாந்து ஜனாதிபதி நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், பாராளு மன்றத்திற்கு விஜயம் செய்து அங்கு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
நேற்றுக்காலை தலதா மாளிகைக்கு மீண்டும் விஜயம் செய்த தாய்லாந்து பிரதமரை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் வரவேற்றனர். தலதா மாளிகையில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர். அங்கிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் சென்ற அவர் நேற்று நண்பகல் நாடு திரும்பினார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த தாய்லாந்து ஜனாதிபதி நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், பாராளு மன்றத்திற்கு விஜயம் செய்து அங்கு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment