Thursday, June 27, 2013

தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு சுற்றுலா வீசா வழங்கப்பட முடியாது:அரசாங்கம் அறிவித்துள்ளது!

Thursday, June 27, 2013
இலங்கை::தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு சுற்றுலா வீசா வழங்கப்பட முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
இவ்வாறு சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்து தன்னார்வ தொண்டுப் பணிகளை மேற்கொண்ட செயற்பாட்டாளர் ஒருவரை அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
 
சென்னையிலிருந்து வந்த பெண் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
விழுது என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அழைபின் பேரில் வந்த பெண் செயற்பாட்டாளரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
 
கடந்த 19ம் திகதி சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்த தேவகுமாரி என்ற பெண், நெடுங்கேணி பிரதேசத்தில் கருத்தரங்கு ஒன்றை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
 
யுத்தத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு இவர் கருத்தரங்கு நடத்தியுள்ளார்.
சுற்றுலா வீசாவின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்த காரணத்தினால் இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

 
 

No comments:

Post a Comment