Tuesday, June 18, 2013

லண்டனில் அடி வாங்கிய புலி ஆதரவு காடையர்கள்: புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் இலங்கை ஆதரவாளர்கள் இடையில் மோதல்!

Tuesday, June 18, 2013
லண்டன்::இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ,புலி ஆதரவு காடையர்களுக்கும்,இலங்கை ஆதரவாளர்கள் இடையிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இலங்கையைப் புறக்கணிக்க வலியுறுத்தி  புலி ஆதரவு காடையர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
 
அதேவேளை, புலி கொடியேந்திய புலி ஆதரவு காடையர்கள் வன்முறையில் இறங்கி சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்களும் திருப்பி தாக்கினர்.இதன்போது  பிரித்தானியக் காவல்துறையினர் ஆதரவாளர்களை தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர்.
 
இதையடுத்து வன்முறையில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியக் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். 
 
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய புலிகளின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் இலங்கை ஆதரவாளர்கள் இடையிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது..

No comments:

Post a Comment