Saturday, June 22, 2013

இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குவதற்காகவே இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு மீண்டும் உயிரூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை: திவயின!

Saturday, June 22, 2013
இலங்கை::இராணுவத்தினரை முகாம்களுக்குள்  முடக்குவதற்காகவே இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு மீண்டும் உயிரூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.
 
வடக்கில் உள்ள இராணுவத்தினரை  முகாம்களுக்குள் முடக்க போவதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு தகவல்கள் நேற்று தெரிவித்துள்ளன.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் 2.9 வது ஷரத்திற்கு அமைய வடக்கில் உள்ள இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் எந்த நாட்டுடனும் இணக்கப்பாடுகளை மேற்கொள்ள போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment