Sunday, June 09, 2013
ஜம்மு::ஜம்மு - காஷ்மீரின், பூஞ்ச் பகுதியில் உள்ள, எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்கு அப்பால், நேற்று மதியம், 1:00 மணியளவில், பாக்., ராணுவத்தினர், இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும், சிறிய ரக ராக்கெட் மூலம் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு குண்டின் சிதறல், எதிர் புறத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ அதிகாரி, நாயிப் சுபேதார் பச்சன் சிங் மீது பட்டது; படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இந்திய ராணுவம் கடும் தாக்குதலை
நடத்தியது. அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, பயங்கரவாதிகள் ஊடுருவல் நிகழ்ந்ததா
என, ஆய்வும் செய்யப்பட்டது. இதற்கு முன், கடந்த மாதம், 27ம் தேதி, பாக்., ராணுவம்
நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகளை, இந்திய பகுதிக்குள்
ஊடுருவ செய்வதற்காக, இது போல் அவ்வப்போது, பாக்., ராணுவ தரப்பில் தாக்குதல்
நடத்தப்படுவது வழக்கம். நேற்று நடந்த தாக்குதலும், அவ்வாறே நடத்தப்பட்டிருக்கலாம்
எனவும் கூறப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையேயான, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி,
நேற்று நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு, இந்தியா தரப்பில் கடும் கண்டனம்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment