Sunday, June 16, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வருவதற்கு முன்னர், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 53 பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமைகள் சம்பந்தமான செயற்பாடுகள், அதற்கு ஏதுவான சட்டத்திட்டங்களை அமுல்படுத்தல், இடம்பெயர்ந்தவர்களை மீளகுடியேற்றல், வடக்கில் காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுத்தல், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு அமையவான நடவடிக்கைகளை நிறைவேற்றுதல், வலது குறைந்தவர்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஆகியன இதில் அடங்ககின்றன.

No comments:
Post a Comment